Opera 12.11 Free Download Full Version



ஆப்பெரா அல்லது ஒப்பேரா (Opera) என்பது ஆப்பெரா மென்பொருளால் மேம்படுத்தப்பட்ட உலகளவில் 27 கோடி எண்ணிக்கையிலான பயனர்களினால் பயன்படுத்தப்படும் உலாவியும் இணையக் கூட்டுத் தொகுப்பும் ஆகும். இணையம் தொடர்பான பொதுவான செய்பணிகளான வலைத் தளங்களைக் காட்சிப்படுத்துதல், மின்னஞ்சல் செய்திகளை அனுப்புதலும் பெறுதலும், தொடர்புகளை முகாமித்தல், இணையத் தொடர் அரட்டை மூலமாக அரட்டையடித்தல், பிட்டொரெண்டின் மூலம் கோப்புகளைப் பதிவிறக்குதல், வலை ஊட்டங்களை வாசித்தல் முதலியவற்றை ஆப்பெராவில் மேற்கோள்ள முடியும். தனியார் கணினி, நகர்பேசி ஆகியவற்றுக்கான ஆப்பெரா உலாவிகளை இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியும்.
உக்கிரைன், பெலருசு போன்ற சில நாடுகளில் ஆப்பெரா புகழ் பெற்ற திரைப்பலக உலாவியாக விளங்குகின்றது. திசம்பர் 2011 தரவுகளின்படி ஆப்பெரா மினியே மிகவும் புகழ் பெற்ற நகர்வலையுலாவியாக உள்ளதுடன் பெரும்பாலான நகர்பேசிகளில் அவற்றின் தயாரிப்பாளர்களால் இயல்புநிலை ஒருங்கிணைவலையுலாவியாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
தத்தல் உலாவல், பக்கத்தைப் பெரிதாக்குதல், சுட்டிக் குறிகாட்டல்கள், ஒருங்கிணைந்த பதிவிறக்க முகாமை மென்பொருள் ஆகிய வசதிகளை ஆப்பெரா கொண்டுள்ளது. ஏமாற்றுப் பரப்புகை, தீப்பொருள் ஆகியவற்றிலிருந்தான உள்ளமைப் பாதுகாப்பு, தனிப்பட்ட தரவுகளை அழிப்பதற்கான வசதி (எ-டு: மீயுரைப் பரிமாற்ற நெறிமுறை நினைவிகளை அழித்தல்) போன்ற பாதுகாப்பு வசதிகளும் ஆப்பெராவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மைக்ரோசாப்ட் விண்டோசு, மாக்கு இயங்குதளம் எக்கு, இலினக்கு, விரீபி. எசு. தி. ஆகிய இயங்குதளங்கள் உள்ளடங்கலாகப் பல்வகைப்பட்ட தனியார் கணினி இயங்குதளங்களில் ஆப்பெரா ஓடுகின்றது. மேமோ, பிளாக்குபெரி, சிம்பியன், நகர்விண்டோசு, அண்டிராயுடு, ஐ. இயங்குதளம் ஆகிய இயங்குதளங்களிலும் யாவாத் தள நுண்பதிப்பிலும் இயங்கும் கருவிகளுக்கும் ஆப்பெராப் பதிப்புகளைப் பெற முடியும். ஆப்பெரா உலாவியானது ஏறத்தாழ 12 கோடி நகர்பேசிகளுடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. நிண்டெண்டோ தி. எசு., வீ ஆகிய ஆட்ட முறைமைகளுக்கான ஒரேயொரு வணிக வலையுலாவி ஆப்பெராவேயாகும். சில தொலைக்காட்சி மேலமைபெட்டிகளும் ஆப்பெராவைப் பயன்படுத்துகின்றன. அடோபி ஆக்கத் தொகுதியில் பயன்படுத்துவதற்கு அடோபி முறைமைகள் ஆப்பெராத் தொழினுட்பத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

1994ஆம் ஆண்டில் பெரிய நோர்வேத் தொலைத்தொடர்பாடல் நிறுவனமான தெலினாரில் ஆய்வுத் திட்டமொன்றாகவே ஆப்பெரா தொடங்கப்பட்டது. 1995இல் ஆப்பெரா மென்பொருள் பொதுப் பங்கு நிறுவனம் என்ற தனியான நிறுவனமாக அது பிரிந்தது. 1996இல் மைக்ரோசாப்ட் விண்டோசில் மட்டும் ஓடக்கூடிய ஆப்பெரா உலாவியின் பதிப்பு 2.0ஏ வெளிப்படையாக வெளிவிடப்பட்டது. இணையத் தொடர்புள்ள கையடக்கக் கருவிகளுக்கான வளர்ந்து வரும் விற்பனை வாய்ப்பில் முதன்மை வகிப்பதற்கான ஒரு முயற்சியாக, 1998இல் நகர்கருவித் தளங்களுடன் ஆப்பெராவை இணைப்பதற்கான திட்டமொன்றும் தொடங்கப்பட்டது. பல்வேறு இயங்குதளங்களிலும் தளங்களிலும் இயங்கக்கூடிய ஆப்பெராப் பதிப்புகளை உருவாக்குவதை எளிதாக்கக்கூடிய புதிய குறுக்குத்தளக் கருவொன்றை 2000ஆம் ஆண்டில் வெளிவிடப்பட்ட ஆப்பெரா 4.0 கொண்டிருந்தது.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5fZhzitobuk_sbl7PCqGFMNDzLNsuXiUihOopbYK1LYufetQIRjt4ale_Ml5UjFb9DmjSQkLODt8GCNDlA4hYW5R3fLnWv9MDggv5s47H5It-Iy2bA9lU4-FQQZigmRKIdZckEF5lNMI/s1600/playerbtd.gif 

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMSBrcmVpEvMCT2ZuJW7WkYycwV5Te_14mpeRUP85RS_JruibFr1QFnLyyasvDaefPKiEQDjnIX0yKGDINf92dHbSifUt62HQasjlCok9jgXtKp3rVMOUfbYr-UKRD50u5vRbuJouh7ZA/s1600/adfly+ilshank.blogspot.com.png

Post a Comment

Previous Post Next Post