நடைமுறையில் புத்தகம் என்ற அச்சு வெளிப்பாட்டிற்குத் தேவையான அனைத்து செயல்களையும் எளிதாகவும், விரைவாகவும், துல்லியமாகவும் செய்து முடிப்பதற்கான வசதிகளையும், கருவிகளையும் தன்னகத்தே கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
அடோபி நிறுவனம் ஏற்கனவே வெளியிட்டிருந்த பக்கவடிவமைப்பிற்கான மென்பொருளான பேஜ்மேக்கருக்கு மாற்றாக உருவாக்கப்பட்டதே இன்டிசைன் ஆகும்.
உண்மையில் பேஜ்மேக்கர் ஆறாவது பதிப்பு வெளிவந்த போதே இன்டிசைன் 1.0 வெளிவந்து விட்டது.எனினும் அதன்பிறகும் பேஜ்மேக்கரின் 6.5,7.0,7.1 ஆகிய பதிப்புகள் வெளியிடப்பட்டன.
7.1க்குப் பிறகு பேஜ்மேக்கர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது இன்டிசைனின் ஏழாவது பதிப்பு (7.0) இன்டிசைன் சிஎஸ் 5 என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.