piano software free download

 Piano Editor Download

கின்னரப்பெட்டி (பியானோ) (piano) என்பது வதிப்பலகையால் (Keyboard) வாசிக்கப்படும் ஓர் இசைக்கருவி. பெரிதாக மேற்கத்திய இசையில் தனித்து வசிப்பதற்கும், அறையிசையில் (Chamber music) வாசிப்பதற்கும், துணைக்கருவியாக (Accompaniment) வாசிப்பதற்குமே பயன்படுத்தப்படும் கின்னரப்பெட்டி, இசை அமைப்பதற்கும் ஒத்திகை பார்ப்பதற்கும் கூட மிக உதவியுள்ளதாக கருதப்படுகிறது. விலை உயர்ந்ததாகவும் கையடக்கமாக இல்லாத போதும், கின்னரப்பெட்டியின் அவதானமும் (versatility) வியாபகமும் (ubiquity) அதை இசைக்கருவிகளுள் மிகவும் அறியப்பட்ட ஒன்றாக உருவாக்கியுள்ளன.
கின்னரப்பெட்டியின் வதிப்பலகையிலுள்ள ஒரு வதியை (Key) அழுத்துவது, பின்னப்படாத துணியால் (Felt) சுற்றப்பட்ட ஒரு சுத்தியலை உருக்கு (Steel) கம்பிகளின் மீது அடிக்கச்செய்கிறது. அந்த சுத்தியல்கள் மீண்டும் அதனதன் இடத்திற்கு வருவதன் மூலம் அந்த உருக்குக் கம்பிகளை தொடர்ந்து அதிர்வுரச்செய்கிறது. இந்த அதிர்வுகள் ஒரு பாலத்தின் வழியாக ஒலிப்பலகையின்(Soundboard) மீது செலுத்தப்படுகிறது. பின்பு, இந்த ஒலிப்பலகையின் மூலமாக ஒலி அலைகள் காற்றில் கலந்து ஒலியாக வெளிப்படுகிறது. அழுத்தப்பட்ட வதியிலிருந்து விரல் எடுக்கப்படும்பொழுது, கம்பிகளின் அதிர்வுகள் ஒரு ஒலிதடு கருவியால்(Damper) நிறுத்தப்படுகின்றன. கின்னரப்பெட்டி, சில வேளைகளில் எருக்கு வாத்தியக்கருவியாகவும்(Percussion instrument) நரம்பு வாத்தியக்கருவியாகவும்(String instrument/Chordophone) வகைப்படுத்தப்படுகின்றது. ஹார்ன்பாச்டல் சாக்சின் இசை வகைப்படுத்துதலின்படி இது நரம்பு வாத்தியக்கருவிகளுடன்(Chordophones) சேர்க்கப்பட்டுள்ளது.


பொதுவாக ஒரு நவீன கின்னரப்பெட்டியில் 88 வதிகள் உள்ளன. கின்னரப்பெட்டியில் தனிநபர் இசை அல்லது குழு இசை வாசிக்கப்படுகிறது. கின்னரப்பெட்டியில் நடுப்புறத்தில் மேற்கொள்ளாக அமைந்த வதி "நடு C வதி" (Middle C Key) என அழைக்கப்படுகிறது. ஒரு பாடலின் இன்னிசை (melody) பொதுவாக நடு C யின் வலது வதிகளில் வாசிக்கப்படுகிறது. ஒரு பாடலின் ஒத்திசை (harmony) பொதுவாக நடு Cயின் இடது வதிகளில் வாசிக்கப்படுகிறது.
கின்னரப்பெட்டி முதன் முதலில் இத்தாலியில் தோன்றியது. Piano என்கிற ஆங்கில சொல் இத்தாலிய மொழியிலிருந்து வந்தது. பியானோ என்பது பியானோபோர்டே(Pianoforte) என்பதன் சுருக்கமே. இன்றைய தினத்தில் இச்சொல் பெரிதாக பயன்படுத்தப்படுவதில்லை. இது, clavicembalo [அல்லது gravicembalo] col piano e forte என்னும் இதன் உண்மையான இத்தாலிய பெயரிலிருந்தே எடுக்கப்பட்டது (எழுத்தின்படி: ஹார்ப்சிகார்ட் - அமைதியுடனும் பெலனுடனும்). இது, இந்த இசைக்கருவியின் வதிப்பலகையை தொடுதலின் மூலம் உண்டாகும் இதன் பிரதிபலிப்பை குறிக்கிறது. இதனால், ஒரு கின்னரப்பெட்டி இசை கலைஞர், சுத்தியல் கம்பிகளை அடிக்கும் வேகத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் வெவ்வேறு வேகங்களில் வாதிகளை உண்டாக்கலாம்.

வரலாறு

கின்னரப்பெட்டி
கின்னரப்பெட்டி முதன்முதலில் 1700-ல் கிறிஸ்திஃபோரி (Cristifori) என்கிற இத்தாலிய இசைக்கருவிக்காப்பாளால் கட்டப்பட்டது. இவர் வடிவமைப்பில் இசைக்கருவியின் நரம்புகள் சுத்தியல்களால் அடிக்கப்பட்டு விடப்பட்டன. இதன் கட்டமைப்பை பற்றி மாஃபெய் (Maffei) என்கிற இத்தாலிய எழுத்தாளர் ஒரு விளக்கமான கட்டுரை 1711-ல் எழுதினார். இந்த கட்டுரையை படித்து ஸில்பெர்மேன் என்பவர் ஒரு மேம்படுத்தப்பட்ட இசைக்கருவியை கட்டினார். இதின் சிறப்பம்சம் அடியில் உள்ள தேய்மான மிதி (damper pedal). இதன் பின்னர் கின்னரப்பெட்டியின் தயாரிப்பு 18ஆம் நூற்றாண்டில் வியன்னாவில் மலர்ச்சி பெற்றது.
1790 இலிருந்து 1860க்குள் கின்னரப்பெட்டியின் நரம்புகளின் தரம் மிகவும் உயர்ந்தது. நரம்புகள் எஃகினால் கட்டப்பட்டது. கின்னரப்பெட்டியில் உள்ள இரும்புச் சட்டங்கள் துல்லியமாக வார்ப்படமிடப்பட்டது. ஒலிநீடிப்பும் மேம்படுத்தப்பட்டது. 1821இல் எரார்டு (Érard) இரட்டை விடுவிப்பு முறையை (double escapement) படைத்தார். இதனால் ஒரு சுரத்தின் மறுவிசைவு மற்றும் வாசிக்கும் வேகம் அதிகப்பட்டது. 1820க்குள் ஒரு கின்னரப்பெட்டியில் 7 எண்மசுரங்கள் அடைக்கப்பட்டன. 



இந்த வரலாறு கொண்ட piano வை நாம் தனியே கொள்வனவு செய்து பயன் படுத்த தேவை இல்லை .

இதை இப்போது நமது கணணிகளிலும் உபயோகப்படுத்தலாம் .அதற்கு கீழே உள்ள link இல் சென்று piano,organ ,greencube,PianoEditor போன்றவற்றை தரவிறக்கி கொள்ளலாம்








https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMSBrcmVpEvMCT2ZuJW7WkYycwV5Te_14mpeRUP85RS_JruibFr1QFnLyyasvDaefPKiEQDjnIX0yKGDINf92dHbSifUt62HQasjlCok9jgXtKp3rVMOUfbYr-UKRD50u5vRbuJouh7ZA/s1600/adfly+ilshank.blogspot.com.png 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgWx1E_DEWyfdFKn5Ls82FKgkUBS8Zvt4xdJHv2ARDiyS5MS0SSpnGPT8Vgdd2cd1teUboCxSgwqsJ0J3t-8bwk5b3MaVLiEW1as90K5Okx1PZBKhpYPFPFE35qs44i907xQHJqesZnjY/s1600/adfou.png

Post a Comment

Previous Post Next Post