3 டிஎஸ் மக்ஸ் (3ds Max) என்பது, ஒரு முப்பரிமாண வரைவியல் மென்பொருள் ஆகும். இது ஆட்டோடெஸ்க் மீடியா அண்ட் எண்டெர்டெயின்மெண்ட் (Autodesk Media & Entertainment) நிறுவனத்தால் உருவாக்கி வெளியிடப்பட்டது. இது வின்32 மற்றும் வின்64 தளங்களில் இயங்குகின்றது. நவம்பர் 2006 இலுள்ள நிலைவரப்படி இதன் 9 ஆம் பதிப்பு பயன்பாட்டில் உள்ளது.
இம் மென்பொருள் தொடக்கத்தில் 3டி ஸ்டூடியோ என்னும் பெயரில் டாஸ் (DOS) தளத்துக்காக யோஸ்ட் குரூப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு ஆட்டோடெஸ்க் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இதன் இரண்டாம் பதிப்பின் வெளியீட்டின் போது இதனை ஆட்டோடெஸ்க் நிறுவனம் விலைக்கு வாங்கியது. 3 டி ஸ்டூடியோவின் 4 ஆம் பதிப்புக்குப் பின்னர் இது விண்டோஸ் NT தளத்துக்கு மாற்றப்பட்டு, 3டி ஸ்டூடியோ மக்ஸ் (3D Studio MAX) எனப் பெயரிடப் பட்டது. இதையும் தொடக்கத்தில் யோஸ்ட் குரூப் நிறுவனமே உருவாக்கியது. இதனை கைனெட்டிக்ஸ் (Kinetix) என்னும் ஆட்டோடெஸ்க்கின் துணை நிறுவனம் வெளியிட்டது. பின்னர் இதன் பெயர் 3டிஎஸ் மக்ஸ் (3ds Max) எனப் பெயர் மாற்றம் பெற்றது.
மேலோட்டம்
3டிஎஸ் மக்ஸ் பொது மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்படும் அசைவூட்டல் (animation) மென்பொருள்களுள் ஒன்றாகும். இது மிக வலுவான உருவமைப்புத் திறன் கொண்டது. இது பெரும்பாலும், நிகழ்பட விளையாட்டு உருவாக்குனர்கள், தொலைக் காட்சி விளம்பரத் தயாரிப்பாளர்கள், கட்டிடக்கலைஞர்கள் போன்றவர்களினால் பயன்படுத்தப்படுகின்றது. இது, காட்சிகளில் சிறப்புத் தோற்றங்களை உருவாக்கவும், திட்டமிடப்பட்ட காட்சிகளை முன்னரே உருவாக்கிப் பார்க்கவும் திரைப்படத் துறையிலும் இது பயன்படுகின்றது.இதை தரவிறக்க உங்கள் கணினியில் µTorrent நிறுவி இருக்க வேண்டும்
µTorrent தரவிறக்க