Mobile Data அழிந்து போனால்!

 இன்றைய உலகில் மொபைல் போன் பல்வேறு பணிகளுக்கான ஒற்றைச் சாதனமாக செயல்படுகிறது.
போன், பாடல், வீடியோ, போட்டோ, இன்டர்நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறிதல், வழி நடத்தல், வங்கிக் கணக்குகளைக் கையாளுதல், மெசேஜ்கள், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன் மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்னவாகும்? நம் அன்றாட வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடும் அல்லவா?


சில போன்களில் பி.சி. சூட் என்ற சாப்ட்வேர் தரப்பட்டு, அதன் மூலம் நம் தகவல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்றிப் பின் மீண்டும் பெற்று பயன்படுத்தக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதி அனைத்து போன்களுக்கும் கிடைப்பதில்லை.

இதே போல ஆன்லைனில் சேமித்து வைக்கக் கூடிய வசதி ஒன்றினை ஓர் இணைய தளம் தருகிறது. இந்த சேவையின் பெயர் rSeven. இதனை http://adf.ly/CIKMr என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து Download செய்து, மொபைல் போனில் பதியவும்.

இந்த சாப்ட்வேர் வசதியும் சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் உள்ள மொபைல்களில் மட்டுமே செயல்படுகிறது. விண்டோஸ் மொபைல் பதிப்பு 6 மற்றும் அடுத்து வந்தவை, சிம்பியன் எஸ்60, மூன்றாவது மற்றும் ஐந்தாவது எடிஷன் ஆகியவற்றில் மட்டுமே இது செயல்படுகிறது.

இதனைப் பதிந்தவுடன் மிக எளிதாக, மொபைல் போனில் உள்ள அனைத்து டேட்டாவினையும், இந்த தளத்தில் பதிந்து வைத்து, இவை தொலைந்து போகும் காலத்தில் மீண்டும் பெற்றுப் பயன்படுத்தலாம்.

வேண்டுகோள் 
இங்கே உள்ள LINK  கலை CLICK செய்தால் OPEN ஆகும்விண்டோவில்  SKIP AD என்பதை CLICK செய்யவும்

Post a Comment

Previous Post Next Post