
புதிய பதிப்பில் உள்ள பயன்கள் சில:
- Windows8 கணினியிலும் சப்போர்ட் செய்யும் படி அமைத்து உள்ளனர்.
- Recycle bin ல் இருந்து குப்பைகளை நீக்குவதில் இருந்த குறைபாடுகள் நீக்கப்பட்டுள்ளது.
- Thunderbird மென்பொருளில் Cache நீக்குவதில் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.
- Safari உலவியில் Browsing History Clean செய்வதில் இருந்த குறைகள் கலைப்பட்டுள்ளது.
- Office 2007 மற்றும் Office 2010 போன்ற மென்பொருட்களில் மூலம் உருவாகும் சில வேண்டாத பைல்களையும் நீக்குகிறது.
- Windows மற்றும் MAC கணினிகளில் இயங்குகிறது. 32bit-64bit ஆகிய இரண்டிலும் வேலை செய்யும்.
- இந்த லிங்கில் சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
உபயோகிக்கும் முறை:
- டவுன்லோட் செய்தவுடன் அந்த மென்பொருளை ஓபன் செய்தால் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும் அதில் உள்ள Analyze என்ற பட்டனை அழுத்தவும்.
- இப்பொழுது உங்கள் கணினியில் உள்ள நீக்க வேண்டிய பைல்கள் அனைத்தும் உங்களுக்கு ஸ்கேன் ஆகி வரும். அதற்கு அருகில் உள்ள Run Cleaner என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் கணினியில் உள்ள அனைத்து தேவையில்லாத பைல்களும் அழிந்து விடும்.
- உங்களுக்கு Cleaning Complete என்ற செய்தி வரும். அவ்வளவு தான் உங்கள் கணினி சுத்தம் செய்ய பட்டு விட்டது.