பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எளிதாக உருவாக்க ஒரு இணையதளம்


அன்றாட வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் தேவைப் படுகின்றன. வேலைக்கு விண்ணப்பம் செய்தல், கல்லூரியில், ID Card போன்ற பல நிலைகளில் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் அவசியமான ஒன்றாகும். நம்மிடம் டிஜிட்டல் கேமராவில் எடுத்த புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் நல்ல புகைப்படங்கள் இருக்கலாம். ஆனால் நிறைய பேருக்கு எப்படி அதை பாஸ்போர்ட் அளவுக்கு மாற்றுவது எனத்தெரியாது. அவசரத்தின் போது பலரும் போட்டோ ஸ்டுடியோவுக்கே ஒடுவார்கள்.

போட்டோஷாப் தெரிந்தவர்கள் இருக்கிற புகைப்படத்தை வைத்தே பாஸ்போர்ட்
உருவாக்குவார்கள். ஆனால் எந்த சிக்கலுமின்றி மென்பொருளின்றி எளிதாக பாஸ்போர்ட் உருவாக்க http://www.epassportphoto.com/ என்ற இணையதளம் பயன்படுகிறது. இதில் சிறப்பான விசயம் என்னவென்றால் உலகிலுள்ள எல்லா நாடுகளுக்கும் ஏற்ற அளவில் பாஸ்போர்ட் புகைப்படங்களை விசா, ஐடி கார்டு போன்ற தேவைகளுக்கு உருவாக்க முடியும்.

எப்படி பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை உருவாக்குவது ?

1. http://www.epassportphoto.com/ இணையதளத்திற்குச் சென்று Country என்ற பிரிவில் உங்கள் நாட்டைத் தேர்வு செய்யவும்.

2. Photo என்ற பிரிவில் வழக்கமான பாஸ்போர்ட் புகைப்படம், விசா, ஐடி கார்ட்
(Passport, visa, ID card) என்ற மூன்று பிரிவுகளில் தேவையானதை தேர்வு செய்யுங்கள்.

3. பின்னர் கீழே உள்ள Get my Passport Photos என்பதைக் கிளிக் செய்யவும். இதன் பின் வரும் பக்கத்தில் புகைப்படங்களை எப்படி எடுக்க வேண்டும் என்று குறிப்பு தரப்பட்டுள்ளது. Browse என்பதைக் கிளிக் செய்து உங்களின் ஒளிப்படத்தைத் தேர்வு செய்து Next கொடுக்கவும்.

4. உங்கள் படம் அப்லோடு ஆனவுடன் Click and Drop என்பதைக் கிளிக் செய்து
தேவையான அளவுக்கு முகம் நன்றாகத் தெரிகிற மாதிரி தேர்வு செய்து விட்டு Next கொடுக்கவும்.5. இதில் Professional மற்றும் Standard ஆகிய சேவைகள் உள்ளன். நாம் கட்டணமில்லா Standard சேவைக்கு No thanks என்பதைக் கிளிக் செய்தால் உருவாக்கப்பட்ட பாஸ்போர்ட் புகைப்படங்களை தரவிறக்கிக் கொள்ளலாம்.

Anushka Hot Chubby Expressions on Hot Cinema Zone
இணையதள முகவரி : http://www.epassportphoto.com/

 

Post a Comment

Previous Post Next Post